முகப்புவணக்கம் நேயர்களே,

அகரம் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழின் (ABC Tamil) நிகழ்ச்சிகளை இணைய வழியாக வானொலிப் பெட்டிகளிலும், கணணிகளிலும், கைத் தொலைபேசிகளிலும், இணையத் தொலைக்காட்சி இணைப்புக்களிலும் கேட்கலாம்.

நிகழ்ச்சிகளை செவிமடுக்கும் உறவுகள் தமது கருத்துக்களைஎம்முடன் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை மேம்படுத்த உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் கருத்துக்கள் எமது நிகழ்ச்சிகளை வளப்படுத்த உதவும் என்பதனால் தங்களது கருத்துக்களை நாம் எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை info@akaramfm.com என்ற எமது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது நிகழ்ச்சிகள் தற்போது மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளன. நாம் இப்போது தான் தவழ ஆரம்பித்துள்ளோம். வெகு விரைவில் நாமும் நடைபயில்வோம். ஓரே நாளில் எழுந்தோடி தடக்கி விழ எமக்கு விருப்பமில்லை. அதனால் மெதுவாக உறுதியாக நாம் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

அகரம் தமிழின் நிகழ்ச்சிகளை தற்போது www.abctamil.com, www.abctamil.co, www.akaramfm.com ஆகிய இணையத் தளங்களிலும் tunein, INDradio, DesiRadio, Shoutcast ஆகிய appsஐ தரவிறக்கம் செய்து அனைத்து விதமான கைத்தொலைபேசிகளிலும், எமது இணையத்தளத்தில் உள்ள listen mobile என்ற இணைப்பின் மூலம் எத்தகைய தரவிறக்கம்இன்றியும், மற்றும் எல்லாவிதமான Wi-Fi வானொலிகளிலும் 24 மணி நேரமும் கேட்கலாம்.

 

Share